ஆமென் தமிழ் டிவி Webtv மூலம் கிறிஸ்தவ ஆவிக்குரிய மற்றும் சமுதாய பணிகள் செய்ய முடியும் என்று நம்பி ஆயத்தப்படுத்தூகிறோம். மற்ற Webtvக்கும் இதற்கும் நிறைய வேற்றுமைகள் இருக்கும். இதை ருசித்து பாருங்கள். புரியும்.
பாஸ்டர் D.C.ரோலண்ட் ஆகிய நான் இந்த தரிசனம் மூலம் கிறிஸ்தவ உலகின் ஒரு உன்னத பணியை துவக்குகிறேன். என்னை க்குறித்து சொல்ல வேண்டுமானால், எனது வயது 69. சென்னையிலிருந்து சுமார் 40 ஆண்டுகளாக கர்த்தருடைய தோட்டத்தில் பணி செய்கிறேன். சிறிதோ பெரிதோ பெற்ற பணி செய்து முடிப்பதே நமது கடமை! எனது பென்ஷன் மூலம் தேவைகள் சந்திக்க கர்த்தர் உதவுகிறார்.
கழுதைக்கு கற்பூர வாசனை தெரியாது என்பது போல, எனக்கு டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டிங் போன்ற எதுவும் தெரியாது. தேவ கிருபை கூட இருந்தால் போதும் என்று தைரியமாக விசுவாசித்து துவங்கி விட்டேன். சில நண்பர்கள் குழி தோண்டினார்கள்; சிலர் வேடிக்கை பார்த்தார்கள்.
ஆனால், தேவாதி தேவன் துணையாய் இருந்து ஒவ்வொரு கட்டத்திலும் தப்புவிக்கும் வல்லமை தந்தார்.
இதை படிக்கும் ஒவ்வொருவரும் இந்த நல்ல முயற்சிக்கு ஆதரவு தாருங்கள். ஜெபத்தில் தாங்குங்கள்.
தேவ சமாதானம் உங்களோடிருப்பதாக, ஆமென்!
கர்த்தருடைய தோட்டத்தில்,
பாஸ்டர் ரோலண்ட் D C.
